இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர்  உயிரிழப்பு – யாழ். கொழும்புத்துறை பகுதியில் சோகம்! 

Wednesday, May 21st, 2025

யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கலைச்செல்வன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்றையதினம் அதிகாலை 4 மணியளவில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி பி.ப 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சியங்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106