செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!
Friday, May 16th, 2025
யாழ். அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று (15) முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
செம்மணி ௲ சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காகக் குழிகள் வெட்டப்பட்ட போது, அதற்குள் இருந்து மனித எலும்பு எச்சங்கள் அவதானிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
இதன்போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று (15) அங்கு அகழ்வாய்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டன. தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106