உள்ளூராட்சி சபைகளின் பிரதான பதவிகளுக்கான பெயர் விபரங்களை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவறுத்து!
Friday, May 16th, 2025
உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் பிரதான பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர் விபரங்களை ஒருவார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ஜுன் மாதம் 02 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.
உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் பெரும்பான்மையைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அந்த அதிகார சபைகளின் மேயர், துணை மேயர், தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை ஒருவார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் கன்னிக் கூட்டம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதிக்குக் கூடுவதற்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை கோட்டா மட்டத்தில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்க வேண்டும்.
உள்ளூராட்சிமன்றங்களில் பெரும்பான்மை இல்லாதவிடத்து, எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி சபை கூடும்போது வாக்கெடுப்பு நடைபெறும்
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106