அதிகளவான மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது!  

Thursday, May 1st, 2025

50 கிலோவிற்கு அதிகமான மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசுவமடு மாமிச வாணிபம் ஒன்றில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட 50 கிலோவுக்கும் அதிகமான மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள மாட்டு இறைச்சி மக்கள் பாவனைக்கு உகந்தது அல்ல என்னும் குற்றச்சாட்டிலும், சுகாதார பரிசோதகரின் சிபாரிசு மற்றும் கால்நடை வைத்தியரின் சிபாரிசு என்பவை இல்லாத காரணத்தினால் சந்தேக நபர் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்று 01.05.2025 முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106