உலக தொழிலார் தினம் இன்று !
Thursday, May 1st, 2025
உலக தொழிலாளர் தினம் இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் திகதி, உலகெங்கிலும் உள்ள நாடுகள் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது தொழிலாளர்கள் என்றால் அது மிகையாகாது.
தொழிலாளர்களின் முயற்சிகளைக் கொண்டாடுவதைக் காட்டிலும், இந்த நாள் தொழிலாளர்களின் உரிமைகளின் முக்கியத்துவத்தையும், நியாயமான வேலை வாய்ப்பு நடைமுறைகளின் அவசியத்தையும் நினைவூட்டுகிறது.
சர்வதேச தொழிலாளர் தினம் என்பது போராட்டம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். 139 ஆவது சர்வதேச தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1886ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் ஒன்றுகூடிய தொழிலாளர்கள் வேலை நேரத்தை 8 மணித்தியாலமாக வரையறுக்குமாறு கோரினர்.
பணிப்பகிஷ்கரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராட்டத்தில் முதலில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர்.
போராட்டம் வலுப்பெற ஆரம்பித்ததுடன் மூன்றாவது நாளில் 65,000 பேர் இணைந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது காவல்துறையினர் தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர்.
இதனைக் கண்டித்து மே மாதம் 4 ஆம் திகதி தொழிலாளர்கள் ஹேமார்கட் சதுக்கத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
காவல்துறை மற்றும் தொழிலாளர்களுக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்தார்.
இந்த போராட்டம் மோதலாக உருவெடுத்து உக்கிரமடைந்தது. போராட்டத்தை முன்னின்று நடத்திய தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
8 மணித்தியால கடமை நேரத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்கள் எப்போதும் எம்முடைய மனதில் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என சர்வதேச தொழிலாளர் அமைச்சு 1889ஆம் ஆண்டு தீர்மானித்தது.
அதற்கமைய ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர்தினம் உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படுகிறது.
எனினும் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன.
இலங்கையில், 1934 ஆம் ஆண்டு, முதல் முறையாக சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
1956 ஆம் ஆண்டு, சர்வதேச தொழிலாளர் தினம், அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106