இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் – இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு வலியுறுத்து!.

Sunday, April 27th, 2025

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றங்கள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

அண்மையில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்த நாட்டு மக்கள் அறியத் தகுதியானவர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைதியை விரும்பும் நாடு என்றும் பிராந்தியத்தில் பதற்றங்கள் போராக மாறினார் அரசாங்கம் என்ன செய்யும் என்பதை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இதேவேளை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முழுமையான போர் ஏற்பட்டால் இலங்கையின் நிலைப்பாடு குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைக் கருத்திற் கொண்டு, இது தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கப்பட வேண்டும் என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106