உள்ளுராட்சித் தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, April 8th, 2025

உள்ளுராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், 20 ஆம் திகதியிருந்து 06 ஆம் திகதி வரை 801 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உள்ளுராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் குறித்த ஒரு வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளன எனவும்,

அதனடிப்படையில், 20 ஆம் திகதியிருந்து 6 ஆம் திகதி வரை 801 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 625 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 176 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106