தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் உண்டு – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Tuesday, April 8th, 2025
தீவக பிரதேசங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என சுட்டிக்கட்டிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அந்த செயற்றிட்டங்களின் தொடர்ச்சியை தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல வரவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்தை வெற்றிபெறச் செய்து எதிர்காலத்தை தமக்கானதாக உருவாக்கிக் கொள்வார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான கட்சியின் வலுப்படுத்தலை முன்னிறுத்திய பரப்புரை கூட்டங்கள் மக்கள் சந்திப்புக்கள் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்றையதினம் (08.04.2025) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அனலைதீவு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஜே/37 மற்றும் ஜே/38 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய இரண்டு தேர்தல் வட்டாரங்களை கொண்ட குறித்த அனலைதீவு பகுதிக்கான விஜயத்தின்போது அனலைதீவு பெரியபுலம் பிள்ளையார் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு மதத் தலைவர்களின் ஆசியினையும் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து குறித்த பிரதேசத்தின் தேர்தல் பரப்புரையை ஆரம்பித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அனலைதீவு மக்களை சந்தித்து கலந்துரையாடி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தியிருந்தார்.
குறித்த பரப்புரை நிகழ்வுகளின்பிரகாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில் –
1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கான பயணத்தினை முன்னெடுத்து வருகின்றேன்

அதன் ஓர் அங்கமாகவே, நாம் இந்த தீவக மண்ணில் மக்களின் கோரிக்கையுடன் கால்பதித்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
தீவக பிரதேசத்தை குறிப்பாக தீவகத்தில் உள்ள பிரதேச சபைகளை எடுத்தக் கொள்வோமாக இருந்தால், தொடச்சியாக எமது ஆட்சியிலே இருந்து வருகின்றது.

இந்த பிரதேசங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இது தீவக மக்களுக்கு நன்கு தெரியும்

அந்தவகையில் மக்களுக்கு சரியான வழி காட்டும் வகையிலும் அவர்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவு வழங்கும் வகையிலும் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
மக்களும் உண்மைகளை புரிந்து கொண்டு சரியான முடிவுகளை எடுத்து ஈழ மக்கள் ஜனநாய ககட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106