ஊர்காவற்றுறையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, April 5th, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில்,
கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா இன்று ஊர்காவற்றுறை பிரதேசத்துக்கு சென்று மக்களை சந்தித்து கட்சி நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தினார்.
இன்நிலையில் ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு கண்கணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, கரம்பொன் மெலிஞ்சிமுனை பங்குத்தந்தை அருட் தந்தை தயாகரன் அவர்களை மரியாதை நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடியதுடன், பிரதேச மக்களின் வாழ்வியல் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
அதேநேரம் ஊர்காவற்றுறை, பருத்தியடைப்பு முனியப்பர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பூஜை வழி்பாடுகளிலும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டதுடன் ஆலய சுற்றுச் சூழலையும் பார்வையிட்டார்.
இதனிடையே ஊர்காவற்றுறை, கரம்பன் கிழக்கு பிரதேசத்திற்கு சென்ற தோழர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் தன்னால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்களின் பயன்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்தினார்.
இதன்போது செயலாளர் நாயகத்துடன் கலந்துரையாடிய பிரதேச மக்கள், கடந்த வருடம் தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டதுடன் தேவையான வீதி மின் விளக்குகளை பொருத்தப்பட்டமையையும் சுட்டிக்காட்டியதுடன், தமது நன்றியையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106