உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்!

Thursday, April 3rd, 2025

உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.  

இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரியும் அடங்கும்.  

அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.

2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

மேலும், வியட்நாமுக்கு 46%, சீனாவுக்கு 34%, இந்தியாவுக்கு 26%, பிலிப்பைன்ஸுக்கு 17% மற்றும் சிங்கப்பூருக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.

000

Related posts:

உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் - பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள...
போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த விசேட நடவடிக்கை - பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவிப்பு!
போட்டிக் கல்வி முறைமையால் தனியார் வகுப்புகளுக்காக 30 வீத நிதியை மேலதிகமாக பெற்றோர் செலவிடுகின்றனர் ...