உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு  விசேட அறிவிப்பு!

Tuesday, April 1st, 2025

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு  விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர்  ஒருவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய வாக்காளர்களுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் உதவியாளர்கள், 18 வயதை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என்பதோடு தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளராக இருத்தல் கூடாது.

தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சி ஒன்றின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ வாக்கெடுப்பு நிலையத்தின் முகவராகவோ இருத்தல் கூடாது.

விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது உதவியாளர்களை உடன் அழைத்துச் செல்ல தகுதி சான்றிதழல் ஒன்றை உரிய வாக்கெடுப்பு நிலையத்தின் அலுவலருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

தகுதி சான்றிழை பெற்றுக்கொள்ள தேவையான விண்ணப்பங்களை கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் அல்லது https://www.elections.gov.lk/ என்ற தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106