மத்திய அரசு சூழ்ச்சி – யாழ் மாநாகர் வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் தொழிலதிபர் சுலக்சன்!
Monday, March 24th, 2025
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு
வரும் வெள்ளியன்று குதித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வேட்புமனு நிரகரிப்பு தொடர்பில் ஊடக சந்திப்பை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்த குறித்த சுயேச்சை குழுவின் தலைவர் சுலக்சன் மற்றும் வேட்பாளர் விஜயகாந்த் ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் மேலும் கூறுகையில் –
எமது சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையில் யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.
இதில் யாழ் மாநகரின் வேட்புமனு பெண் வேட்பாளரது உறுதியுரை குறித்த விடயம் தொடரிலான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம்.
அதன்படி யாழ் மாநகரில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்விடையம் குதித்து நாம் சட்ட ஆலிசகர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.
அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவுப்புக்கு எதிராக நாம் நியாயம் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106