மைத்துனர் தாக்குதல் – மன விரக்தியில் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Saturday, March 22nd, 2025

யாழில் மைத்துனர் தாக்கியதால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது அளவெட்டி – விசவெட்டி பகுதியைச் சேர்ந்த அருட்பிரகாசம் மணிவண்ணன் (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் மதுப் பாவனைக்கு அடிமையானவர். இந்நிலையில் கடந்த 18 ஆம் திகதி மைத்துனருக்கும் குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக மைத்துனரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பின்னர் சிகிச்சையின் பின் நேற்றையதினம் வீடு திரும்பி, வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டார். இந்நிலையில் நேற்றுக்காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106