ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்தில் பாரிய மோசடி – அநீதி என பயனாளிகள் ஆவேசம்!

Wednesday, March 19th, 2025

ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு கடந்தவருடம் (2024) வழங்கப்பட்ட 297000 ரூபா பெறுமதியான 15 இரட்டைவலைகள் பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஒருவரது நிதியில் இருந்து 297000/- ரூபா ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக 15 இரட்டை வலைகள் ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த வருடம் (2024) ஒப்படைக்கப்பட்ட வலைகளை ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் இரகசியமாக பெற்று பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்தது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.

வலைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகளின் விபரத்தை கோரி பிரதேச செயலகம் அனுப்பிய கடிதத்தின் பின்னரே குறித்த மோசடி வெளிப்பட்டுள்ளது

இது குறித்து ஆழியவளை கிராம சேவகரை வினவிய வேளை, கடந்த வருடம் (2024) ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்தினரிடம் 297000/- பெறுமதியான வலைகள் ஒப்படைக்கப்பட்டை உண்மை. அத்துடன் வலை பெற்றமையானது மீனவர்கள் யாருக்கும் தெரியாது என்ற முறைப்பாடு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்றார்.

பாரிய மோசடியில் ஈடுபட்ட ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு  ஆழியவளை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106