“வெற்றிலைக் கேணியில் கரைவலை வாடியால் மீனவர்களிடையே தொடரும் முறுகல் நிலை” –  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியம் அவதானம்!

Wednesday, March 19th, 2025

“வெற்றிலைக் கேணியில் கரைவலை வாடியால் மீனவர்களிடையே தொடரும் முறுகல் நிலை” எனும் தலைப்பில் 18.03.2025 திகதி வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண  பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையில் அடிப்படையில் கவனம் செலுத்தியுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இந்த பிரச்சினையினை தீர்ப்பதற்கு உரிய தலையீட்டினை மேற்கொண்டு 21.03.2025 இற்குமுன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவி பணிப்பாளருக்கும் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் அறிவுறுத்தல் வழங்கி எம்மால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106