மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற வயோதிப பெண் கீழே விழ்ந்து மரணம்!

Wednesday, March 5th, 2025

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழ விழுந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் –

குறித்த மூதாட்டி கடந்த 17 ஆம் திகதி தபால் நிலையத்தில் முதியோருக்கான கொடுப்பனவை எடுத்துவிட்டு வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார். இதன்போது வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணொருவர் அவரை ஏற்றிக்கொண்டு வந்தார்.

இதன்போது திடீரென அந்த மூதாட்டி கீழே விழுந்து மயக்கமடைந்தார். பின்னர் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related posts:


தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ!
பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிப்பு -  வெளியானது அதிர்ச்சி தகவல்! ...
கடற்றொழிலாளர்கள் தொழில்த் துறைசார் வல்லுநர்களாக பரிணாமம்பெற வேண்டும் - யாழ் சமுத்திரவியல் பல்கலையின்...