டக்ளஸ் தேவானந்தா நிதிப் பங்களிப்பு – இறுதிக் கட்டத்தை எட்டிய கற்கோவளம் தீர்த்தக்கரை பாலத்தின் புனரமைப்பு பணிகள்!
Sunday, March 2nd, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட பருத்தித்துறை, கற்கோவளம் தீர்த்தக்கரை பாலத்தின் புனரமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
முன்னதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இன்நிலையில் குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகளின் இறுதிக்கட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை சிறீ ரங்கேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிறிய அளவிலான கடன் திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை - அரசாங்கம்!
அனைத்து அமைச்சுக்களையும் கண்காணிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு!
தயார் நிலையில் கடற்றொழில் அமைச்சு - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!
|
|
|


