யாழ். இசைக் கலையக்கத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவினை  முன்னிட்டு நாடாளவிய ரீதியிலான இசைப் போட்டி!

Wednesday, February 26th, 2025

யாழ். இசைக் கலையக்கத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவினை  முன்னிட்டு நாடாளவிய ரீதியிலான இசைப் போட்டியானது யாழ். கண்டி வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தில் நாளை காலை ஆரம்பிக்கபடவுள்ளதாக அதன் தலைவர் செல்வரவிசங்கர் தெரிவித்தார்.

குறித்த போட்டியானது இலங்கையில் வாழுகின்ற 16 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட இசை ஆர்வலர்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக அமைந்துள்ளது. பல இசைக்கலைஞர்கள் இலைமறை காயாக மறைந்துள்ள நிலையில் அவர்களை வெளியுலகிற்கு எடுத்து காட்டும் முயற்சியாக இந்த போட்டி அமைந்துள்ளது.

குறித்த போட்டி நிகழ்வுகளில் ஏற்கனவே விண்ணபித்தவர்களும் அதுதவிர போட்டி தினமாகிய நாளை புதன்கிழமை புதிதாக இணைய விரும்புபவர்கள் நாளைய தினம் நேரடியாக போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் .

இதேவேளை நாளைய தினம் இடம்பெறவுள்ள போட்டிகளில் தெரிவு செய்யபடுவோர் அடுத்த போட்டிகளுக்கு அழைக்கப்படுவர். இறுதிப்போட்டி ஏப்ரல் மாதமளவில் இடம்பெறும்.

குறித்த போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறும் மூன்று வெற்றியாளர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும். மேலும் தென்னிந்திய இசைக் கலைஞர்களை தாண்டியும் சுதேசிய இசைக் கலைஞர்களை வளர்ப்பதே இந்த போட்டியின் நோக்காக உள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106