சட்டத்துக்கு புறம்பாக சாராயம் விற்பனை செய்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைது!
Monday, February 10th, 2025
நீண்ட காலமாக சட்டத்துக்கு புறம்பாக சாராயம் விற்பனை செய்த பெண்ணொருவர் இன்றையதினம், 27 கால் போத்தல்கள் சாராயத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கால் போத்தல் சாராயம் ஒன்றினை ரூபா ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்ததாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
000
Related posts:
மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு வங்கிச் சேவைகள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!
எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு அமைச்சர் நாமல் கோரிக்கை!
ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு - பொருளாதார மற...
|
|
|


