இவ்வருடம் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட நடவடிக்கை – தெங்கு பயிர்ச்செய்கை சபை !
Sunday, February 9th, 2025
தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் என்று தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
இந்த செயல்முறையின் முதல் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்தார்.
அதன்படி, கப்ருகா கடன் திட்டத்திற்கு இணையாக, இந்த கப்ருகா நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைப்பட்டு எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தெங்கு பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இவற்றில் ஒரு மில்லியன் மரங்கள் வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கு அருகில் நடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
பொலித்தீன் அற்ற வலயமாக தேசிய அருங்காட்சிய வளாகம் பிரகடனம்!
கிராமத்தின் வளர்ச்சிக்காக தம் முன்னெதிரே காணப்படும் தடைகளை தாண்டி நேர்மையாக உழைப்பதற்கு அனைவரும் முன...
பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் - வட மாகாண சமுத...
|
|
|


