தனியாக வசித்து வந்த வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை!

Friday, February 7th, 2025

இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண் ஒருவரின் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் குறித்த வீட்டுக்கு சென்று, தான் கமநலசேவை திணைக்களத்தில் இருந்து வருவதாகவும், விவசாய அழிவுக்கு நட்ட ஈடாக குறித்த பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை பெறுவதற்கு 50 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் உண்மையறியாத அந்த வயோதிபப் பெண் 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார். தான் ஏமாற்றப்பட்ட விடயம் பின்னர் தெரியவந்த நிலையில் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

000

Related posts:

எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் - ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்ததை எச்சரிக்கும் கனிய வள கூட்டுத்...
கொரோனா முடிவுக்கு வந்ததும் 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலையை எத்ரிகொள்ள நேரிடும் - ஐ.நா. சபை எச்சரிக...
வாகன புகைப்பரிசோதனை நீக்குவது குறித்து ஜனாதிபதி கவனம் - இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவிப்பு!

கரவெட்டி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களது தகவல்களை தருமாறு பணிப்பாளர் கேதீஸ்வரன் வசர வேண்டுகோள்...
எரிபொருள் விலை உயர்வு - புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக...
இலங்கை மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு - இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை பலப்படுத்து...