மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நாளை வெளியிடப்படும்!
Thursday, January 16th, 2025
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களை ஆராயும் பணிகள் இன்று (16) நிறைவடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)தெரிவித்துள்ளது.
இதேநேரம் மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
2025 ஜனவரி மாதம்முதல் எதிர்வரும் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதிக்கு தற்போது நடைமுறையிலுள்ள மின் கட்டண நடைமுறையை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல மின்சார சபை யோசளை முன்வைத்துள்ளது.
இந்த யோசனை தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மக்கள் கருத்துக் கணிப்புகளை முன்னெடுக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.
அந்தக் கருத்துக் கணிப்புகள் கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
இதன்போது மின் கட்டணத்தை 20 முதல் 30 சதவீதத்தால் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்தை குறைப்பதா அல்லது தற்போது நடைமுறையிலுள்ள கட்டண முறையை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பான தீர்மானத்தை நாளை அறிவிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106