இலங்கைக்கு மீண்டும் அனுப்புங்கள் – சட்டவிரோதமாக இந்தியா சென்ற அகதிகள் கோரிக்கை!
Thursday, January 9th, 2025
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த அகதிகள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கையளித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்டவிரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சமடைய தொடங்கினர்.
இதுவரை 309 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் கடல் வழியாக அகதிகளாக தஞ்சமடைந்து மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்களை அகதிகளாக இந்திய அரசு இதுவரை பதிவு செய்யாத காரணத்தினால் இவர்களுக்கான எந்தவொரு நிவாரணமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வருவாய் இன்றி தவித்த இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக அண்மையில் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் அகதிகளாக பதிவு செய்யாமல் உள்ள இலங்கை தமிழர்கள் படகு மூலம் அல்லது விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு நேற்றுமுன்தினம் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து மனு கையளித்துள்ளனர்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106