பேருந்துகளிலுள்ள அபாயகரமான உதிரிப்பாகங்களை அகற்ற விசேட சோதனை நடவடிக்கை!
Wednesday, January 8th, 2025
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களை மோட்டார் வாகன பரிசோதகர்களின் ஊடாக சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார்.
இதன்போது பஸ்களில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அபாயகரமான பொருத்துக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுமென அவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
000
Related posts:
ஓய்வுபெற்ற ஊழியர்களை சேவையில் இணைக்கத் தீர்மானம் - ரயில்வே திணைக்களம்!
கம்பஹாவில் தொடர்ந்தும் முடக்கநிலை: அரச மற்றும் தனியார் வங்கிகி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை திறக்க அ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்ற...
|
|
|


