இந்திய அணி படு தோல்வி – தொடரை வென்றது  அவுஸ்திரேலியா!

Sunday, January 5th, 2025

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5  ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஸ்கொட் போலண்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் வெப்ஸ்டர் 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

4 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதற்கமைய 162 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.

இதன்படி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 – 1 எனும் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாயகனாக ஸ்கொட் போலண்ட் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் நாயகனாக ஜஸ்பிரிட் பும்ரா தெரிவுசெய்யப்பட்டார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106