ஈ.பி.டி.பியின் அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்த  வன்னி தேர்தல் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பு!

Sunday, December 22nd, 2024


வன்னி தேர்தல் மாவட்ட த்தில் ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் ( ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் புதிய கட்டமைப்பு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால்  கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்களுடன் இன்று (21.12.2024) கலந்துரையாடலொன்றை செயலாளர் நாயகம் முன்னெடுத்திருந்தார்.

குறிப்பாக வன்னி தேர்தல் மாவடத்தின் அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இன்றையதினம் வவுனியா சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற தேர்தலின் பின்னடைவுகள் குறித்த அக, புற காரணிகளை ஆராய்ந்து கட்சியை  வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை மறுசீரமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனடிப்படையில்  முல்லைத்தீவு,மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவடத்தின் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை செழுமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் வகையில் முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் அமைப்பாளராக அ. ஜெயராஜ் (தோழர் கிருபன்) அவர்களை கொண்ட மாவட்டக் கட்டமைப்பும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால்  நியமிக்கப்பட்டது.

மேலும், கட்சியின் தேசிய மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு தயாராகுமாறும் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குதிப்பிடத்தக்கது.
0000

Related posts:

கல்வியை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லுங்கள் : உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக என்றும் நாம்...
நாம் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது மக்கள் சுதந்தரமாக வாழ்வதற்கே அன்றி நாம் சுகபோகங்களை அனுபவிப்பதற்க...
ஒன்லைன் தளங்கள் மூலம் கட்டுமானப் பொருட்களை வாங்குபவர்களைக் குறிவைத்து புதிய  நிதி மோசடி - பொலிஸார் ப...

உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க முடியு...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தென் பகுதிக்கு நேரடி விஜயம் - குறைபாடுகளை தீர்த்து வைக்க அதிகாரிகளுக்கு ...
நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும்  நடவடிக்கை மிக அழகாக முன்னோக்கி நகர்த்தப்படுகிறது - JVP ரோஹண விஜேவீர...