எலிக்காய்ச்சல் – யாழ் மாவட்டத்தில் 121 பேர் பாதிப்பு – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!
Friday, December 20th, 2024
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் செய்தியாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்
இதனடிப்படையில் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 8 பேரும் எலிக் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, எலிக் காய்ச்சலைத் தடுப்பதற்காகத் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. நேற்றுவரை சுமார் 8,300 பேருக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இந்த கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக, கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நிபுணர் குழுவொன்று வருகை தந்துள்ளது.
இந்த குழு பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று கால்நடைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு குருதி மாதிரிகளை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106