பாரிய ஊழல் மோசடி – இலங்கையர்கள் இருவருக்கு பொருளாதாரத்தடை விதித்தது அமெரிக்கா!
Tuesday, December 10th, 2024
பாரியளவிலான ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர்கள் இருவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கே இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படைக்கு மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கையூட்டல் பெற்றதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த இருவரினது குடும்ப உறுப்பினர்களும் தமது நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் வகையில் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106