அஸ்வெசும திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு மாவட்டச் செயலாளர் பிரதீபன் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
Saturday, December 7th, 2024
தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர கிராம அலுவலர் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் டிசெம்பர் 9 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க முடியும் என யாழ்ப்பாணம் மாவட்டம் மாவட்டச் செயலாளர் பிரதீபன், தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்துள்ள அவர் –
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் (அஸ்வெசும) தொடர்பாக இதுவரை விண்ணப்பிக்காதவர்கள். முதலாம் கட்டத்தில் விண்ணப்பித்தும் வீடுகளிற்கு அலுவலர்கள் வருகைதந்து அவர்களால் தரவுகள் சேகரிக்கப்படாத நபர்கள் மற்றும் தகவல் சேகரிக்கப்பட்டும், நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் தகவல்கள் பதிவேற்றப்படாத நபர்கள்.
முதலாம் கட்டத்தில் அல்லது இரண்டாம் கட்டத்தில் ஆரம்ப விண்ணப்பம் கோரலின் போது நபர் ஓருவர் தாம் வசித்த கிராம அலுவலர்; பிரிவு அல்லது பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து மாற்றலாகி தற்போது வேறு கிராம அலுவலர்; பிரிவு அல்லது பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் தற்போது வசிக்கும் தனது புதிய கிராம அலுவலர்;; பிரிவு அல்லது பிரதேச செயலாளர் பிரிவில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்தில் எண்ணீட்டு பணியானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் இடம்பெறும் என நலன்புரி நன்மைகள் சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) முதலாம் கட்டத்தில் கொடுப்பனவுக்காக தெரிவுசெய்யப்படாமை தொடர்பான மனக்குறைகளை, அதற்கான விண்ணப்பத்தினை தங்களது கிராம அலுவலர்;; அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தில் பெற்று டிசெம்பர் 15 ஆம் திகதிவரையான காலப் பகுதிக்குள் கிராம அலுவலர்;; அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது மனக் குறைகளை தெரிவித்துக் கொள்ளமுடியும்.
இத்திட்டம் தொடர்பான மேலதிக விளக்கங்களை தமது பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் சபை அலகினை தொடர்புகொள்வதன் மூலம் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106