மழையுடனான காலநிலை – 40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் வலியுறுத்து!
Tuesday, December 3rd, 2024
மழையுடனான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதனால், மின் உற்பத்தி நிலையங்கள் அதிக கொள்ளளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நேற்று முன்தினம் (01) நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 62.2% நீர் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் 35% முதல் 40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி!
பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள் - பொதுமக்களிடம் கடல்சார் சூழல் பாதுகாப...
மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் - நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூட...
|
|
|


