2025 பெப்ரவரி தொடக்கம் வாகன இறக்குமதி நடைபெறும்!

Monday, December 2nd, 2024

வானக இறக்குமதிக்கு சர்வதேச நாணயநிதியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் வாகன இறக்குமதிகள் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி

உரிய முறையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். பெப்ரவரியில் இருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும். ஏனெனில் இந்த அரசாங்கம் எமக்கு

ஒரு கொள்கையாக வாகன இறக்குமதியை அனுமதிப்பதாக ஒரு வார்த்தையை வழங்கியுள்ளது.

வாகனங்களை வழங்க தயாராக உள்ளோம். மேலும், இதன் மூலம் மக்கள் நியாயமான விலையில் நல்ல வாகனத்தைப் பெற முடியும்.

வாகனங்களின் இறக்குமதியை மீட்டெடுக்க பல விடயங்கள் உள்ளன. வாகன இறக்குமதிக்கான கொள்கையை தயாரிப்பதற்காக நிதியமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. தேசியக் கொள்கையை உருவாக்குவது வாகனங்களில் இருந்து தொடங்கியது. அது நல்ல விடயம்தான். பெப்ரவரி முதல் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கான பணத்தை ஒதுக்க மத்திய வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது.

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியமும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கையில் சுமார் 600 வாகன இறக்குமதியாளர்கள் 04 வருடங்களாக அனாதரவாக்கப்பட்டுள்ளனர்” இவ்வாறு இந்திக்க சம்பத்  தெரிவித்துள்ளார்

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106