உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து 90 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள்- 100 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

Saturday, November 30th, 2024

ரஷ்யா 90 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் சுமார் 100 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், நேற்று ரஷ்யாவின் புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை மூலம் கியேவில் உள்ள யுக்ரைனின் கட்டளை மையங்களைத் தாக்கப்போவதாக அச்சுறுத்தியிருந்தார். இந்த அச்சுறுத்தலையடுத்தே இன்று இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது, உக்ரைன் மக்கள் பெருந்தொகையானவர்கள் மின்சாரமின்றி இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்

அதேவேளை, உக்ரைனுடனான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளான நிலையில், தற்போது இரு தரப்பினரும் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் பதவியினை ஏற்பதற்கு முன்னர் இரு தரப்பினரும் நவீன வலுவான ஆயுதங்களைப் பரஸ்பரமாகப் பிரயோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106