உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் 333,185 பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சை திணைக்களம் தகவல்!

Monday, November 25th, 2024

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

குறித்த பரீட்சை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 333,185 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,793 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவதாகப் பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்தார்.

இந்தநிலையில், பரீட்சார்த்திகள் 30 நிமிடங்களுக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்குப் பிரவேசிக்குமாறு அவர் கோரியுள்ளார்

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகத் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்தார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் போது காலநிலையினால் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் 117 என்ற துரித இலக்கத்திற்கோ அல்லது, பரீட்சைகள் திணைக்களத்தின் துரித இலக்கமான 1911 இற்கோ  அழைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106