சீரற்ற காலநிலை – யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2294 பேர் பாதிப்பு!
Thursday, November 21st, 2024
தசீரற்ற காலநிலை – யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2294 பேர் பாதிப்பு!ற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் ரீ.என் சூரியராஜா தெரிவித்தார்.
இதன்படி சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவல்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 111 குடும்பங்களைச் சேர்ந்த 475 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் நல்லூரில் மின்னல் தாக்கம் காரணமாக 1 குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தெல்லிப்பழை சங்கானை, காரைநகர் சண்டிலிப்பாய், கோப்பாய், மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிலும் தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உதவி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106