இந்திய மீனவர்களின் படகுகளை கடற்படையிடம் வழங்குமாறு புதிய அரசு உத்தரவு!

Wednesday, November 20th, 2024

இந்திய மீனவர்களின் படகுகள் புதிய ஆட்சியில் கடற்படையினரின் பயன் பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் பிடிக்கப்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகளே கடற்படையினரின் பாவனைக்கு வழங்குமாறு கடற்றொழில் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மன்னார் மற்றும் மயிலிட்டித் துறைமுகங்களில் தரித்து நிற்கும் நல்ல நிலையில் உள்ள படகுகளையே கடற்படையினரிடம் கையளிக்குமாறு கடற்றொரில் நீரியல்வளத் துறை பணிப்பாளர்  2024-11-13 திகதிய கடிதம் மூலம் பணித்துள்ளார்.

கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் எல்.ஜி.ஆர்.இசுராணி ஒப்பமிட்டு இந்த உத்தரவை மாவட்டங்களிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கமைய மன்னாரில் இருந்து 5 படகுகளும் யாழ்ப்பாணத்தில் இருந்து 8 படகுகளும் என மொத்தம் 13 படகுகள் கடற்படையினரின் பாவனைக்காக வழங்கப்படவுள்ளது.

கடற்படையினரன் பாவனைக்கென வழங்கவுள்ள படகுகளில் IND/TN/08/MM.346, IND/TN/08/MM.1872, IND/TN/08/MM/1436,  IND/TN/06/MM/6824, IND/TN/10/MM/693, IND/TN/10/MM/405, IND/TN/10/MM/2573, IND/TN/11/MM/857, IND/TN/11/MM/298, IND/TN/11/MM/28 ஆகிய படகுகளுடன் IND/TN/16/MM/1872, IND/TN/16/MM/1861 இலக்க படகுமாகவே இந்த 13 படகுகளும் கடற்படையின் பயன்பாட்டிற்கு வழங்கப் பணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106