ரஷ்யாவைத் தாக்க அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணை –  யுக்ரைன் பயன்படுத்த ஜோ பைடன் அனுமதி!

Monday, November 18th, 2024

ரஷ்யாவைத் தாக்குவதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்

அமெரிக்க அதிகாரி ஒருவர் இதனை உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பல மாதங்களாக, யுக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஏடி ஏசி எம் எஸ் (ATACMS) எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில், தற்போது யுக்ரைனுக்கு தமது சொந்த எல்லைகளுக்கு வெளியே தாக்குவதற்கு அமெரிக்காவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தமக்கு எதிரான போரில் யுக்ரைன் மேற்கத்தேய நாடுகளின் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்துமாயின் அது நேட்டோ இராணுவ கூட்டணி, நேரடியாகப் போரில் பங்கேற்பதாக அமையும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்னதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106