வைத்தியசாலையில் தீ விபத்து – 10 சிறுவர்கள் உயிரிழப்பு!

Saturday, November 16th, 2024

இந்தியாவின் – உத்திரப்பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

உத்திரப்பிரதேசத்தின் – ஜான்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவர்களே இவ்வாறு தீப்பரவலால் உயிரிழந்ததாக அந்த நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அங்கு 47 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 37 பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மீட்கப்பட்ட சிறுவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தநிலையில், தீப்பரவலானது பல மணிநேரத்துக்குப் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106