ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் – ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிப்பு!

Friday, November 8th, 2024

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் இடம்பெறும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஜனநாயகம் மேலோங்கியுள்ளது என்பதை தற்போதைய தேர்தல் பெறுபேறு உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேர்மையானதும், நீதியானதுமான தேர்தல் இடம்பெற்றுள்ளது. இந்தநிலைமை தொடர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் இணைந்து பணியாற்றுமாறு தமது பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106