நாடாளுமன்றத் தேர்தல் – உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு அவசர அறிவிப்பு!
Friday, November 8th, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நேற்றுடன் (07) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 27 ஆம் திகதிமுதல் நேற்றுவரை வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்று (8) முதல் தபால் நிலையங்களுக்கு சென்று அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
அத்துடன் இன்று தொடக்கம் பொதுத் தேர்தல் நடைபெறும் நவம்பர் 14 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
அதற்காக தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
00
Related posts:
இயலாமையை மூடி மறைக்க அரசாங்கத்தை குறைக்கூறுவது பயனற்றது – மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்ச...
உலக வங்கியின் ஒத்துழைப்புடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு நிதியுதவி - வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப...
புங்குடுதீவில் இருந்து சட்டவிரோதமாக மாட்டு இறைச்சியை நூதன முறையில் மறைத்து கொண்டுசென்ற நபர் வேலணையி...
|
|
|


