அரிசி விலையில் மாற்றம் – வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!
Thursday, July 29th, 2021
அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தெர்டர்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசியை 88 ரூபா என்ற சில்லறை விலைக்கு நுகர்வோருக்கு சதொச ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியை 92 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் நாட்டரிசியை 97 ரூபா என்ற விலைக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மருந்து வகைகளின் விலை மேலும் குறைக்கப்படும் - சுகாதார அமைச்சு!
கடந்த காலங்களில் தேவையற்ற வகையில் அரச சேவைகளை நிரப்பியமையே இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்...
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் - சொத்துக்கள், பொறுப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள் தொடர்பில் துறைசார் அம...
|
|
|


