கியூபாவை உருகுலைத்த ரஃபேல் சூறாவளி!
Friday, November 8th, 2024
ரஃபேல் (Rafael) சூறாவளி காரணமாக கியூபா வியாழன் அன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மணித்தியாலத்துக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தல் வீசிய காற்று, நூற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தியது, மரங்களை வேரோடு சாய்த்தது, மின் கட்டமைப்பை சீர் குலைத்தது மற்றும் பிற உள்கட்டமைப்பைகளையும் சேதப்படுத்தியது.
எனினும், ரஃபேல் தாக்கத்தினால் கியூபாவில் உடனடியாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் ரஃபேல் சூறாவளி 2 ஆம் வகை புயலாக வலுவிழந்து, வளைகுடாவில் மெக்ஸிகோவை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், அங்கு வரும் நாட்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹவானாவிற்கு மேற்கே 75 கிலோ மீட்டர் (45 மைல்) தொலைவில் புதன்கிழமை மாலை கியூபாவின் மேற்குப் பகுதியை ரஃபேல் புயல் கடந்தது.
சூறாவளி காரணமாக 461 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததாக கியூபா அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதிலுமிருந்து 283,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் 98,300 பேர் ஹவானாவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 மில்லியன் மக்களை இருளில் மூழ்கடித்த ரஃபேல் சூறாவளி நாட்டின் மின் கட்டத்தைத் தாக்கிய ஒரு நாளுக்குப் பிறகு, வியாழன் அன்று தீவின் கிழக்குப் பகுதிக்கு மின்சாரத்தை மீட்டெடுக்கத் தொடங்கியுள்ளதாக கியூபா அதிகாரிகள் தெரிவித்தனர்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106