11 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவு – அரசியல் கட்சிகளால் இறுதி கூட்டங்கள் ஏற்பாடு!
Wednesday, November 6th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகள் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான நாள் நெருங்கி வருவதால் பிரதானக் கட்சிகளும், ஏனைய கட்சிகளும், சுயேச்சை குழுக்களும் இறுதிகட்ட பரப்புரைகளில் தீவிரமடைந்துள்ளன.
எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைய உள்ளதுடன், 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் எந்தவொரு வேட்பாளரும், கட்சியும் பிரசார நடவடிக்கையில் ஈடுபட முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியை அமைதிக் காலப்பகுதியாக கருதி அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரங்கள் சில மாவட்டங்களில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் பல மாவட்டங்களில் சுமூகமான நிலையில் இடம்பெற்று வருகின்றன.
இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலை போன்று பொதுத் தேர்தலில் பிரசாரங்கள் தீவிரமாக இல்லையென பொது மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106