பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசனின் பந்துவீச்சு முறை குறித்து சந்தேகம்!

Tuesday, November 5th, 2024

பங்களாதேஷ் (Bangladesh) கிரிக்கெட் அணியின் அனைத்துத்துறை ஆட்ட வீரர் சகிப் அல் ஹசனின் (Shakib al Hasan) பந்து வீச்சு முறை குறித்து ஆய்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் கவுண்டி செம்பியன்சிப்பில் போட்டி தொடரில் சர்ரே அணியுடனான ஆட்டத்தின்போது, அவருடைய பந்து வீச்சு முறை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது.

நடுவர்களால் இந்த சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து, அவரது பந்துவீச்சு நடவடிக்கையை பகுப்பாய்வு செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

37 வயதான பங்களாதேஷ் வீரர், இந்த கவுண்டி பருவத்தில் இதுவரை 11 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இந்தநிலையில் அவர், அடுத்து வரும் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்படவில்லை என்றாலும், அங்கீகரிக்கப்பட்ட வசதியில் மேலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான விவாதங்கள் நடைபெற்று வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி பகுப்பாய்வு செயற்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

000

Related posts: