20,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட கப்பல் இன்று இலங்கை வருகின்றது – எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!
Monday, March 14th, 2022
எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் என எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதகடிப்படையில் 20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று திங்கட்கிழமை இலங்கையை வந்தடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைந்த கப்பலில் இருந்த டீசல் தற்போது நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த கப்பல் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வரும் என எதிர்பார்த்திருந்தபோதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தாமதமானது. கப்பலில் 38 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் டீசல் இருந்ததாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!
குருந்தூர் மலையில் அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடி...
மட்டு மாவட்டத்தின் விவசாயத்துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துவருகின்றது - இராஜாங்க அமைச்சர் சிவநேசது...
|
|
|


