தீபாவளி பண்டிகை இன்று!
Thursday, October 31st, 2024
தமது அடியார்களான மக்களைக் காப்பதற்கு நரகாசூரன் வதம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை உலகலாவிய ரீதியில் இந்துக்கள் இன்று கொண்டாடுகின்றனர்.
தீபாவளி திருநாளில் ஆலயங்களிலும், வீடுகளிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி, தீப ஒளியை பரவச் செய்து இந்துக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
தீபாவளிப் பண்டிகை தீமையின் வடிவமான அசுரர்களை கடவுளின் அவதாரம் அழித்ததால் உருவானது என்கின்றன இந்து புராணங்கள்.
திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்றபோது அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசூரன் ஆகின்றான். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் நரகாசூரன் துர்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் அவனை மாவிஷ்ணு அழிக்க நினைத்தார்.
எனினும் அவன் தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். நரகாசூரன் உடன் மாவிஷ்ணு போரிட்ட போது அவன் மாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு மயக்கம் அடைவது போல் மாவிஷ்ணு பூமியில் விழுந்தார். இதைக் கவனித்த சத்தியபாமா கோபமடைந்து நரகாசூரனை போருக்கு அழைத்தார்.
சத்தியபாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசூரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்தியபாமா தனது தாய் என்று தெரியவந்தது.
அவரிடம் அம்மா, நான் மறைந்த இன்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும் எனக் கோரினான். அவ்வாறு நரகாசூரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாளே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.
இந்தியா, நேபாளம், இலங்கை, மியன்மார், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இந்த பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்
இவ்வாறு இன்றையதினம் அனைத்து இந்துக்கள் மத்தியிலும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டுவருகின்றது. அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106