பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு !
Saturday, October 26th, 2024
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாளை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் அனைவரையும் வரவழைக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நேற்று (25) வெளியிட்டார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தீவின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் அது தொடர்பான உள்ளுர் நிலைகளிலும் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
நச்சுப்புகைகளை வெளியேற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை - இலங்கை மோட்டார்...
ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்!
இனவாத யுத்தத்திற்கு தீ மூட்டியவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது ஏன்? – ஈ.பி.டி.பியின...
|
|
|


