ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்!
Monday, October 14th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதந்த வண்ணம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில் 3 கண்காணிப்பு அமைப்புகள் ஏற்கனவே நாட்டுக்கு வருகை தருவதை உறுதிபடுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேபோல் உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகளின் அழைப்பின் பேரில் மற்றுமொரு வெளிநாட்டு கண்காணிப்பு குழுவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கடந்த மூன்று தினங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 688 சாரதிகள் கைது!
இதுவரை 14,285 பேருக்கு கொரோனா: 36 பேர் மரணம்!
நாடாளுமன்ற விசேட குழுக்களுக்கு நிபுணர்கள் - ஆய்வாளர்களின் ஒத்துழைப்பை பெற நடவடிக்கை!
|
|
|


