வளர்ந்து வரும் ஆவடர்களுக்கான 20க்கு 20 தொடர் – இறுதி ஆட்டத்தில் இலங்கை ஏ அணி ஆப்கானிஸ்தான் ஏ அணியுடன் பலப்பரீட்சை!
Saturday, October 26th, 2024
ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தின், வளர்ந்து வரும் ஆவடர்களுக்கான 20க்கு 20 போட்டித் தொடரில், இலங்கை ஏ அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
ஓமான் கிரிக்கெட் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இலங்கை ஏ அணி பாகிஸ்தானின் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
மேலும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் 136 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஏ அணி 17வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
டோனி தான் முடிவு எடுக்க வேண்டும்!
தொடரை இழந்தார் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க!
மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு - காலநிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!
|
|
|


