பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலில் அடையாளம் – தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!
Friday, October 25th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரல் அடையாளப்படுத்தும் செயல்முறையை தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், பொது தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் குறியீடு இடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது,
முன்னதாக ஜனாதிபதித் தேர்தலுக்காக இடது கையின் சுண்டு விரலில் குறியிடப்பட்டுள்ள நிலையில், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடது கையின் கட்டை விரலைப் பயன்படுத்தவிருப்பதால், பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலை பயன்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லாத வாக்காளர்களின் கட்டை விரலிலோ அல்லது வலது கையில் வேறு ஏதேனும் விரலிலோ குறியீடு இடப்படும் எடினவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரை ஊடகத்துறை அமைச்சரால் வெளியீடு!
இலங்கை வருகிறார் சீனப் பிரதமர்- முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகும் என எதிர...
|
|
|


