இரண்டாவது போட்டியிலும் வெற்றி – மேற்கிந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

Thursday, October 24th, 2024

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (23) இடம்பெற்றது.

மோசமான வானிலையால் ஆட்டத்தின் ஆரம்பம் தடைப்பட்டது.  பின்னர் போட்டியின் ஒரு இன்னிங்ஸ் 44 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு ஆட்டம் ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பபைத் தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 36 ஓவர்கள் நிறைவில் 189 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் ஆரம்பம் முதலே இலங்கை பந்துவீச்சாளர்களின் கடும் அழுத்தத்திற்கு ஆளான மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களால் அதிக நேரம் களத்தில் நிற்க முடியவில்லை.

பிராப்டன் கிங், ஷர்பான் ரூதர்ஃபோர்ட் மற்றும் குடாகேஷ் மோடி ஆகியோர் மட்டுமே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஓட்டங்களுக்கு அதிக பங்களிப்பை அளித்தனர்.

189 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு ஆடிய இலங்கை அணி 38.2 ஓவர்களில் 190 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் சரித் அசலங்கா 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை அணி பெற்ற வெற்றியின் மூலம் 2- 0 அடிப்படையில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.  மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெற உள்ளது.

000

Related posts: